ஞாயிறு, 5 ஜூன், 2011

ஊழல் நோயை தடுப்பதற்கு சாமியாரின் புதுவகை மருந்து...!

ரூ.18 கோடி செலவில் சாமியார் ராம்தேவ் ‘ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதம்’   ஆர்எஸ்எஸ் அரசியல் நாடகம்
    ‘யோகா குரு’ பாபா ராம்தேவ், சனிக்கிழமை தில்லி ராம்லீலா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினார்.

           வரலாறு காணாத கொடிய ஊழல்களால் காங்கிரஸ் தலைமையிலான அரசு நெருக்கடியில் சிக்கியுள்ள சூழலை பயன படுத்தி மீண்டும் மதவாத அரசியலை முன்னுக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன், மதவெறி 
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிரத் தூண்டுதலோடு மேற்படி சாமியார் ராம்தேவ் இந்த உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார்.

    ஊழலுக்கு எதிராகவும் கருப்புப் பணத்திற்கு எதிராகவும் இந்தப் போராட்டத்தை நடத்துவதாக ராம் தேவ் சார்பில் ஊடகங்கள் ஊதித் தள்ளிக்கொண்டிருக்கின்றன.

                 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், விண்வெளி அலைக்கற்றை ஊழல், 
காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், கர்நாடக கனிமச் சுரங்க ஊழல் என இந்திய தேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஊழல் ராஜ்யங்களை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், கர்நாடகத்தில் பாஜக தலைமையிலான அரசும் நடத்திக் கொண்டிக்கின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாட்டை உலுக்கியுள்ள இந்த ஊழல்களால், அனைத்துத்தரப்பு மக்களும் மேற்கண்ட அரசுகள் மீதும், ஊழல் பேர்வழிகள் மீதும் ஆத்திரமும் கொந்தளிப்பும் அடைந்துள்ளனர். இந்த கொந்தளிப்பை நாடு தழுவிய பெரும் போராட்டங்களாக வெடிக்க விடாமல் தடுத்து நிறுத்தும் முயற்சியில் இந்திய நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ சக்திகள் இறங்கியுள்ளன.

       ஊழலுக்கு எதிரான மக்களின் உணர்வை மழுங்கடிக்கும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக சமீபத்தில் சமூக சேவகர் அன்னா ஹசாரேயை உண்ணாவிரதம் இருக்கச் செய்ததன் மூலம், ஊடகங்களைப் பயன்படுத்தி அவரை மகாத்மா காந்தி அளவிற்கு உயர்த்தி மக்களிடையே முன்னிறுத்தியதன் மூலம், ஊழல் எதிர்ப்பு என்பது ஒரு தனி நபர் போராட்டமாக ஒடுக்கப்பட்டது.

            ஹசாரேயின் போராட்டத்தை அறுவடை செய்து கொள்ள காங்கிரசும், பாஜகவும் தீவிரமாக முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஊழலுக்கு எதிரான மக்களின் உணர்வை தனது மதவெறி அரசியலுக்கு பயன்படுத்தி, இந்திய அரசியலில் வீழ்ந்து கிடக்கும் மதவாத பாஜகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலுக்கு கொண்டுவரும் நோக்கத்தோடு ஆர்எஸ்எஸ் அமைப்பு, தனது தீவிர ஆதரவாளர்களில் ஒருவரும், யோகா கலையின் மூலம் மக்களிடையே ஓரளவு அறிமுகம் செய்யப்பட்டிருப்பவருமான சாமி யார் ராம்தேவை உண்ணாவிரதத் தில் இறக்கிவிட்டிருக்கிறது.

      இதன்படி, போராட்ட அறிவிப்பை வெளியிட்ட ராம்தேவுடன், மத்திய  அரசு கபில்சிபல் உள்ளிட்ட நான்கு அமைச்சர்களை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்திப்பார்த்தது. ஆனால், ஊழல் செய்து ஒருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்; பிரதமரை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யும் முறை கொண்டுவரப்பட வேண்டும் என்பது உள்பட ராம் தேவ் முன்வைத்த பத்து கோரிக்கைகளை உடனடியாக ஏற்க வாய்ப்பில்லை என்று அமைச்சர்கள் கைவிரித்ததைத் தொடர்ந்து, சனிக்கிழமை காலை சுமார் 5 மணியளவில் தனது உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.

     தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் யோகா பயிற்சி நடத்தப்போவதாகக் கூறி காவல் துறையிடம் அனுமதி பெற்ற ராம்தேவ், ஆர்எஸ்எஸ்சும், பாஜக வும், விஎச்பி உள்ளிட்ட மதவெறிப் பரிவாரங்களும் சில வட மாநிலங் களிலிருந்து திரட்டி அனுப்பிய “தொண்டர்களிடையே”, ‘ஊழலை ஒழிக்காமல் ஓயமாட்டேன்’ என்று கூறி உண்ணாவிரதத்தை அறிவித்தார்.

        இந்தப்போராட்டத்திற்கு பாஜக பேராதரவு தெரிவிப்பதாக உடனடியாக அறிவித்தது.

          ஆனால், காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக் விஜய்சிங், ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, சமூக சேவகி மேதா பட்கர் உள்ளிட்டோர் மட்டுமின்றி பூரி சங்கராச்சாரியாரும் கூட, ராம்தேவின் இந்தப் போராட்டத்தை நாடகம் என்று விமர்சித்துள்ளனர். மிகப்பிரம்மாண்டமான பந்தல், கண்களைப் பறிக்கும் அலங்காரம், 5 ஆயிரம் மின் விசிறிகள், ஏர் கூலர்கள், ஆயிரக்கணக்கான குளியலறைகள், 
கழிப்பறைகள் என சுமார் ரூ.18 கோடி செலவில் நடைபெறும் இந்த ஆடம்பர உண்ணாவிரதம் ஒரு “5 ஸ்டார் உண்ணாவிரதம்” என்று திக் விஜய் சிங் விமர்சித்துள்ளார். ராம் தேவின் போராட்டத்தை ஆர்எஸ் எஸ் அமைப்பும், விஎச்பியும் இணைந்தே நடத்துகின்றன என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

வாபஸ் :

    இதனிடையே, கருப்புப்பணம் குறித்த தனது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டதால் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக சனிக்கிழமை மாலை ராம்தேவ் அறிவித்தார் என பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.

சிபிஎம் விமர்சனம் :

    ஊழல் கருப்புப்பண நோயைத் தடுப்பதற்கு மருந்து கண்டுபிடிக்க சந்நியாசிகளால்தான் முடியும் என்றால் அப்புறம் அதற்காக அரசாங்கமே தேவைப்படாது என் றும், உண்ணாவிரதப் போராட்டம் என்பது ஒரு அரசியல் நாடகம் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை கூறினார்.

         ஊழலினால் சொந்த முகத்தோற்றம் கெட்டுப்போய் அச்சமடைந்துள்ள மத்திய அரசு தான் ராம்தேவின் பின்னால் செல்கிறது. பொதுச்சொத்துக்களை தனியார்மய மாக்குகிற புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள்தான் ஊழல் வளர்ச்சிக்குக் கார ணம். ஆனால், அன்னா ஹசாரேயும் ராம்தேவும் அத்தகைய கொள்கைகளை ஆதரிப்பவர்கள்தான். அதனால் அவர்களது அணுகுமுறைகள் நன்மை செய்யாது என்று எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை கூறினார்.

நன்றி : தீக்கதிர் 

1 கருத்து:

S.Raman, Vellore சொன்னது…

Instead of requesting him, the Government should have allowed him to continue the Fast and die ultimately. Only then these publicity struggles will end