வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

இப்போதாவது வாயை திறப்பாரா மன்மோகன் சிங்...?

                  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை குற்றம் சாட்டியது. ஆனால், ஒரு நயா பைசாகூட இழப்பு ஏற்பட  வில்லை என்று மன்மோகன் சிங் அரசின் மந்திரி பிரதானிகள் வாய் கூசாமல் வாதிட்டனர். மத்திய தொலைத்தொடர்புதுறை அமைச்சராக ஆ.ராசா இருந்த காலத்தில் வழங்கப்பட்ட 2ஜி 122 உரிமங்களை ரத்து செய்யுமாறு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதிலிருந்து இழப்பு ஏற்பட்டிருப்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய் துள்ளது. இழப்பு இல்லை என்று கூறியவர்கள் தங்கள் முகத்தைக் கொண்டுபோய் எங்கு வைத் துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.
             2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வழங்கப் பட்ட 122 உரிமங்கள் தானடித்த மூப்பாகவும் சட்டவிரோதமாகவும் வழங்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக கூறியுள்ளது. இந்த உரிமங்களைப் பெற்ற எடிசலாட், யூனிநார், எஸ்ஸார், வீடியோகான், ஐடியா, லூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தலா ரூ. 5 கோடி அபராதம் விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
              மன்மோகன் சிங் அரசிற்கு உச்சநீதிமன்றத் தின் வெளிப்படையான கண்டனமாகும் இது. மன் மோகன் சிங் தலைமையிலான ஐமுகூ - 2 அரசு ஊழலில் புரையோடிப் போயுள்ளதற்கு இது மேலும் ஒரு சாட்சியாகும்.
                     ஊழலே நடைபெறவில்லை என்றும் ஊடகங்கள்தான் ஊதிப் பெரிதாக்குகின்றன என்றும் கூறிவந்த திமுக தலைமை இப்போது என்ன சொல்லப்போகிறது?
                    தற்போதைய தொலைத்தொடர்புதுறை அமைச்சர் கபில்சிபல், 2ஜி ஒதுக்கீட்டில் இழப்பே ஏற்படவில்லை என்று சாதித்ததோடு ஊழலில் தொடர்புடைய அனைவருக்கும் வக் காலத்து வாங்கி வந்தார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, மான உணர்ச்சி கொஞ்ச மேனும் உள்ளவராக இருந்தால் அவர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
                       ஆனால், அந்த மனிதரோ மானம் கிலோ என்ன விலை என்று கேட்பவராக இருக்கிறார். இப்போதும்கூட தனது வக்கரித்த சட்ட அறி வைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசுக்கு எதிரானது அல்ல என்றும் முந்தைய பாஜக கூட்டணி அரசு வகுத்த கொள்கையின் படிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் வியாக்யானம் செய்கிறார்.
                   உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் மன்மோகன் சிங் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது மிகப்பெரிய கேள் விக்குறியாகும். 2ஜி ஒதுக்கீட்டில் இழப்பு ஏற் பட்டிருப்பதை உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ள நிலையில் இந்த ஊழல் வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையிலும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
                       இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சேர்ப்பது குறித்து இரண்டு வாரங்களுக்குள் முடிவு செய்யுமாறு சிறப்பு நீதி மன்றத்தை உச்சநீதிமன்றம் பணித்துள்ளது. இந்த ஊழல் நடைபெற்றபோது ப.சிதம்பரம் நிதி யமைச்சராக இருந்தார். அவரது துறை இந்த ஒதுக்கீட்டுக்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. விசாரணை வளையத்திலிருந்து சிதம்பரம் தப்ப முடியுமா? என்பது சந்தேகமே.
                   ஊழல் கறைபடிந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், மிகப்பெரிய தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நடத்திய பகல்கொள் ளைதான் அலைக்கற்றை வரிசை ஒதுக்கீட்டு ஊழல். இந்த கூட்டணியின் லட்சணம் வெளுக் கத் துவங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை: