புதன், 1 அக்டோபர், 2014

கருணாநிதியின் அமைதியும் மவுனமும் நமக்கு நன்றாக புரிகிறது...!

நன்றி : தி இந்து
                 சிந்துபாத் கதை போல் இழுத்துக்கொண்டே இருந்த  - அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் 18 ஆண்டு காலமாக இழுத்தடிக்கப்பட்ட வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு சென்ற சனிக்கிழமை அன்று மிகுந்த பரபரப்புகளுக்கு மத்தியில் முடிவுக்கு வந்தது. தீர்ப்பு ஜெயலலிதா மட்டுமல்ல அதிமுக காரர்களே எதிர்பாராத தீர்ப்பாக இருந்தது. ஜெயலலிதா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பு தேதியான செப்டம்பர் 27 அன்று காலையிலிருந்தே தமிழகத்தில் இருக்கும் இரண்டு திராவிடகட்சிகளுக்குள் - குறிப்பாக அந்த இரு கட்சிகளின் தலைமைகளுக்குள் மிகுந்த பயம் கலந்த உணர்வுகளும், பரபரப்புகளுமே பரவியிருந்தன என்பது தான் உண்மை. தீர்ப்பு எப்படியிருக்குமோ... என்ன தண்டனையோ என்ற அச்சம்  அதிமுக தலைமைக்குள்ளும், என்ன தீர்ப்பு வந்தால் எப்படி எதிர்வினையாற்றுவது என்ற பயம் திமுக தலைமைக்குள்ளும் இருந்தன என்பதை  யாராலும் மறுக்கமுடியாது. நீதிமன்ற தீர்ப்பு வெளிவரும் வரை அதிமுக தலைமை பெங்களூரு நீதிமன்றத்திற்கு வெளியிலும், திமுக தலைமை அதன் கட்சித்தலைவர் கருணாநிதியின் வீட்டிலும் மிகுந்த பரப்பரப்புடனும், பதட்டத்துடனும் காத்திருந்தனர் என்பதை தொலைக்காட்சிகளும், செய்தித்தாள்களும் காட்டின. தமிழக மக்கள் எதிர்ப்பார்த்தது என்னன்னா....? எப்படியும் நமக்கெல்லாம் லட்டு கிடைக்கும். ஊரெல்லாம் பட்டாசு சத்தம் கேட்கும். ஆனால் அதை செய்யப்போறது யாரு...? திமுகவா...அல்லது அதிமுகவா...? என்பது தான் கேள்வியுடன் தான் மக்கள் தீர்ப்பு வரும் நேரத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள். தீர்ப்பு வெளியே வந்தவுடன் ஊரெங்கும் காதுகிழிய பட்டாசு சத்தம்  கேட்கும் என்றும், எப்படியும் தங்களுக்கு வாய் இனிக்க லட்டு கிடைக்குமென்றும் தான் எதிர்ப்பார்த்து காத்திருந்தார்கள். ஒன்று இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று சொல்லி ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டால், அதிமுக காரர்கள் ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்து, பொது மக்களுக்கு லட்டுகள் கொடுத்தும் மிகப் பிரம்பாண்டமாக கொண்டாடுவார்கள் என்றும், அல்லது தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் திமுக காரர்கள் பட்டாசு வெடித்து லட்டு கொடுத்து கொண்டாடுவார்கள் என்றும் தான் மக்கள் எதிர்ப்பர்த்தார்கள். ஆனால் தீர்ப்பு சொல்வதற்கு முன்பு இந்த இரண்டு திராவிட கட்சிகளிடமுமே ஏகப்பட்ட பட்டாசுகளும், லட்டுகளும் இருந்தன என்பதும், அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதும் உண்மையிலும், உண்மை.
               ஆனால் தீர்ப்பு ஜெயலலிதாவிற்கு எதிராக போகவே அதிமுக காரர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தீர்ப்பு ஜெயலலிதாவிற்கு எதிரானது என்றால், அது திமுக தலைவர் கருணாநிதிக்கு சாதகமானது என்றுதானே பொருள். அப்படி தானே தமிழ்நாட்டில் ஒரு எழுதப்படாத விதியாக இருந்துவருகிறது. ஏற்கனவே தீர்ப்புக்காக காத்திருந்து கருணாநிதியின் வீட்டில் குண்டர்கள் புடைசூழ உட்கார்ந்திருந்த கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மேல்மட்டத் தலைவர்கள் யாருடைய முகத்திலும் தீர்ப்பு வெளியானவுடன் மக்கள் எதிர்ப்பார்த்தது போல் சந்தோஷமோ, ஆரவாரமோ, ஒளியோ  காணப்படவில்லை. மாறாக அதிர்ச்சி தான் தெரிந்தது. முகத்தில் ஈயாடவில்லை. அமைதியாய் அடங்கிப்போயிருந்தார்கள் என்பது உண்மை. மாநிலம் முழுதும் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் என்ற செய்தி வந்தவுடன் திமுக தலைவர் கருணாநிதி உடனடியாக ''தயவுசெய்து யாரும் இனிப்புகள் வழங்குவதோ, பட்டாசுகள் வெடிப்பதோ செய்யாதீர்கள்...'' என்று தன்னுடைய கட்சித்தொண்டர்களுக்கு அன்புடன் கட்டளையிட்டார். அதை கேட்டவுடன் பொதுமக்களுக்கும், கட்சிக்கார்களுக்கும் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை விட பெருத்த அதிர்ச்சியாக இருந்தது. இந்த கட்டளையை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. ''ஊழல் ராணி ஜெயலலிதாவின் தண்டனை எதிர்ப்பார்தத்து தான். நீதி வென்றது... தர்மம் வென்றது... உடன்பிறப்புக்களே... இனி தமிழகம் நம் கையில் தான்... தேர்தலுக்கு தயாராய் இரு...'' என்றெல்லாம் கருணாநிதி வீரவசனம் பேசுவார். இந்த தீர்ப்பை கொண்டாடுவதற்கு தங்களை உற்சாகப்படுத்துவார் என்றெல்லாம் எதிர்ப்பார்த்தவர்கள் எமாற்றமடைந்தார்கள்.
             தீர்ப்புக்கு எதிர்வினையாற்றாமல், சந்தோஷத்தில் பொங்கி எழாமல் கருணாநிதி இவ்வளவு பெரிய அமைதியும், அடக்கமும், மவுனமும் காப்பது ஏன் என்று அவரது கட்சிக்காரர்களுக்கும் தெரியும், தமிழக மக்களுக்கும் புரியும். 66கோடிக்கே ஜெயலலிதாவிற்கு இவ்வளவு பெரிய தண்டனையும் அபராதமும் என்றால், 1,76,000கோடிக்கு தன் மனைவிக்கும், ஆசை மகளுக்கும் எவ்வளவு பெரிய தண்டனையும், அபராதமும் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுப்பார்த்திருப்பார். அதனால் வந்தது தான் இந்த அமைதியும், அடக்கமும், மவுனமும் என்பதை யாராலும் புரிந்துகொள்ளமுடியும்.

2 கருத்துகள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//66கோடிக்கே ஜெயலலிதாவிற்கு இவ்வளவு பெரிய தண்டனையும் அபராதமும் என்றால், 1,76,000கோடிக்கு தன் மனைவிக்கும், ஆசை மகளுக்கும் எவ்வளவு பெரிய தண்டனையும், அபராதமும் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுப்பார்த்திருப்பார். அதனால் வந்தது தான் இந்த அமைதியும், அடக்கமும், மவுனமும் என்பதை யாராலும் புரிந்துகொள்ளமுடியும்.//இது ஒரு பால்குடிக்கும் தெரியும். ஆனால் கருணாநிதி குடும்பம் கூண்டோடு போனால் தான் விடிவு.
அந்த நன்நாளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Jagaveran சொன்னது…

காழ்ப்புணர்விற்கு ஒர் அளவே இல்லையா? தங்கள் அபிமானி உள்ளே போய்விட்டால் அவருடைய எதிரி வெளியே இருக்கக்கூடாது எனும் உங்களின் நல்ல எண்ணத்திற்கு பாராட்ட வார்த்தைகளே இல்லை. அவர்களின் வழக்கு வந்து, அது நிரூபிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்படாத முன்பே அந்தத் தீர்ப்பு இன்றே வரக்கூடாதா... வந்து எங்களின் நெஞ்சங்களில் பால்வார்க்கக்கூடாதா என எண்ணும் உங்களின் பால்மணம் மாறா பிஞ்சு உள்ளத்திற்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லையே!