சனி, 13 டிசம்பர், 2014

போதும் இத்தோடு விட்டுவிடுங்கள் ரஜினிகாந்த் சகிக்கில...!

           
           எம்.ஜி.ஆருக்கு அடுத்து வயதான பின்னும் இளைஞர்களை உசுப்பேற்றிவிடும் ஹீரோவாக ரஜினிகாத்தை சொல்லலாம். தமிழகத்தில் முன்னெப்போது இல்லாத அளவிற்கு நடுநிசி ஒரு மணிக்கு ரஜினி நடித்த ''லிங்கா'' திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஐ.டி கம்பெனிகள் உள்ளிட்ட கார்ப்பரேட் கம்பெனிகள் இந்திய இளைஞர்களை நம்பி இரவு நேரங்களில் இயங்குவது போன்று, தமிழக இளைஞர்களின் பாக்கெட்டை குறிவைத்து ''கார்ப்பரேட் நடிகர்'' ரஜினிகாந்த்தின் திரைப்படம் நடுநிசி நேரத்தில் திரையிடப்படுகிறது. டிக்கெட் விலை 1000... 2000 என்ற வசூலிக்கப்படுகிறது. அரசு கண்டுகொள்ளவேயில்லை என்பது இன்னொரு விஷயம். ஆனாலும் அந்த நேரத்திலும் கட்டுக்கடங்காத இளைஞர்களின் கூட்டம்... ஆர்ப்பரிப்பு... ஆர்ப்பாட்டம்... வெறித்தனமான செயல்கள்... இதைப்பார்த்ததும் எங்கே செல்கிறார்கள் நம் இளைஞர்கள் என்ற வேதனை. மீண்டும் தங்கள் தலைவர்களை திரையரங்குகளிலும், திரைப்படங்களிலும் தேடுகிறார்களே என்ற கவலை எழுகிறது.
              எல்லாம் சரி... 60 வயதை கடந்த ஒரு ''பெரியவர்'' 18 வயதே ஆன பெண் பிள்ளைகளோடு மனசாட்சியே இல்லாமல் ஆடிப்பாடி நடிக்கிறாரே... இது நியாயம் தானா என்று அதை பார்க்கிற இரசிகர்களுக்கு உறுத்தவே இல்லையா..? முரண்பாடாக தெரியவேயில்லையா..? 
           ''அன்புள்ள ரஜினிகாந்த்...!'' இனி மேலாவது உங்கள் வயதிற்கேற்ற கதாபாத்திரத்தில் நடியுங்கள். லிங்கா போல் நடிப்பதை இத்தோடு விட்டுவிடுங்கள்.. சகிக்கலை.. இது விமர்சனம் அல்ல. இன்றைய இளைஞர்களின் மீது உண்மையான அக்கறை வைத்துள்ள ஒரு தந்தையின் வேண்டுகோள்.

3 கருத்துகள்:

கங்கா சொன்னது…

லிங்காவுக்கு சங்கா? யாரோ கிங்கா என்று கேட்டதன் பாதிப்பு.

sivaje36 சொன்னது…

ரஜினி உண்மையிலேயே ஒரு நடிகனா? ஒரு வியாபாரி அவ்வளவே.

ப.கந்தசாமி சொன்னது…

ஏன் சார், இந்த வயிற்றெரிச்சல்?

நானேஏஏஏஏஏ (80) இன்னொரு கல்யாணம் கட்டிக்கலாமாவென்று யோசித்துக்கொண்டிருக்கிறேன் !!!!