வியாழன், 2 ஏப்ரல், 2015

சாதனை புரியும் புதுச்சேரி Dr.அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையம்...!

                                                                                                                     

                அண்மையில் நடைபெற்ற IBPS நடத்திய ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளில் புதுச்சேரி Dr.அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ-மாணவியர்களில் Probationary Officer பணிக்கு இரண்டு பேர்களும், Clerical பணிக்கு ஆறு பேர்களும் தேர்ச்சிப் பெற்றிருக்கிறார்கள்.  இவர்கள் அனைவரும் எங்கள்  வீட்டுப்பிள்ளைகள் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள் என்பது போன்ற உணர்வுகளோடு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும்  இருக்கின்றது. 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட நாளிலிருந்து இங்கு பயிற்சிபெறும்  மாணவ-மாணவியர் தொடர்ந்து வெற்றி பெறுவது என்பது சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தில் மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. 
            எங்கள் மையத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட   மற்றும் வசதியற்ற தொழிலாளர்களின் வீட்டுப்பிள்ளைகள் நம்பிக்கையோடு பயிற்சி பெற  வருகிறார்கள். பயிற்சிக்குப்பின் அவர்களின் திறமைகளினால் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்று, இதுவரையில்  LIC., SBI, Post Office, JIPMER, State Govt Dept., IOB., Bank of India, Indian Bank - ஆகிய துறைகளில் சேர்ந்து அதிகாரியாகவும், கிளர்க்காகவும், அசிஸ்டெண்டாகவும் என இருபது  இருபால் இளைஞர்களும் பணியமர்த்தப்பட்டு, சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்   என்பதை நினைத்துப்பார்க்கும் போதே பெருமையாகவும், பிரமிப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது.
                 தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் புதுச்சேரி உட்பட சுமார் 30க்கும்  மேற்பட்ட மையங்களில் இதுபோன்று நிறைய இளைஞர்கள் சிறப்பாக பயிற்சி பெற்று பல்வேறு துறைகளில் பணிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். மேலும் பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரம் மற்றும் தொலைதூர மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இது போன்ற பயிற்சி மையம் இல்லாததால் கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஊர்களிலிருந்தும் நம் மையத்தில் படிக்கிறார்கள். அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக நடைபெறும் மையம் நமது புதுச்சேரி அம்பேத்கர் மையம் என்று நினைக்கும் போது உறசாகத்தையும், உந்துதலையும் தருகிறது. இது உண்மையான இயக்கப்பணிக்கும், களப்பணிக்கும் கிடைத்திட்ட அங்கீகாரம் என்பதை யாராலும்  மறுக்கமுடியாது.
            மேலும் வரும் காலங்களில், ''மீண்டும் அறிவொளி இயக்கம்'' என்ற பெயரில் எழுத - படிக்கத் தெரியாத பெண்களுக்கு எழுத்தறிவு வகுப்பிற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மேலும் ஆங்கில பேச்சுப்பயிற்சி வகுப்பு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுப்பணிக்கான தேர்வுகளுக்கான பயிற்சி, மத்திய அரசுப்பணியான சிவில் சர்விஸ் முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்புக்கான சிறப்பு வகுப்பு என பல்வேறு பயிற்சி  வகுப்புகளுக்கு திட்டம் போடப்பட்டுள்ளது. தோழர்கள் அனைவரின் ஒத்துழைப்போடும், ஆதரவோடும் முன்னேறுவோம்... வெற்றிபெறுவோம்...!
இத்தனை வெற்றிக்கும் உறுதுணையாக இருந்த
அத்துணை நல்லிதயங்களுக்கும் எங்களின்
நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்...!

கருத்துகள் இல்லை: