சனி, 30 மே, 2015

மநுதர்ம சூழ்ச்சியும் பார்ப்பனிய தந்திரமும் இணைந்த சென்னை ஐ.ஐ.டி .,..!


                 ஒரு காலத்தில் பார்ப்பனிய கோட்டையாய் திகழ்ந்த மத்திய அரசு நிறுவனங்களெல்லாம் தகர்ந்துவிட்ட நிலையில், உயர்சாதியை சேர்ந்தவர்களும், வசதிப்படைத்தவ்ர்களும் மட்டுமே படிக்கக்கூடிய சென்னை ஐ.ஐ.டி-யில் குறிப்பிட்ட சில மாணவர்களால் நடத்தப்பட்டு வந்த ''அம்பேத்கர் -பெரியார் வாசிப்பு வட்டம்'' என்ற அமைப்பை மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் ஐ.ஐ.டி நிர்வாகம் தடை செய்திருக்கிறது.  அந்த வாசிப்பு வட்டத்திலும், அவர்களது முகநூலிலும் மோடியைப் பற்றியும், அவரது ஆட்சியைப் பற்றியும் விமர்சனம் செய்கிறார்களாம். அதை தாங்கிக்கொள்ள முடியாத ஆட்சியாளர்களும், நிர்வாகமும் கூட்டு சேர்ந்து ஜனநாயகத்தின் குரல்வலையை நெரித்திருக்கிறது. விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாதவர்களுக்கு எதற்கு ஆட்சியையும், பதவியும்...? தூக்கியெறிந்து விட்டு ஓடவேண்டியது தானே...! ஆட்சியாளர்களின் அவலங்களை பார்த்து முணுமுணுத்தல் கூட ஆகாதென்றால் அரசியல் அமைப்பு சட்டம் அளித்துள்ள கருத்து சுதந்திரத்தை  குப்பைத்தொட்டியில் தூக்கிப் போடவேண்டியது தானா...?   இதற்கு பேர் தான் மோடியின் தூய்மை இந்தியா திட்டமா...?
              ஐ.ஐ.டி நிர்வாகத்தின் இந்த செயல் என்பது, மநுதர்ம சூழ்ச்சியும், பார்ப்பனிய தந்திரமும் இணைந்த பாசிச குணத்தின் வெளிப்பாடு என்பதையும், சுதந்திரமான கல்விச் சூழலை தடை செய்யும் சர்வாதிகார போக்கு என்பதையுமே காட்டுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூகத்தின் மீது அக்கறையுள்ளவர்களும், முற்போக்கு சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும், பொருளாதார மேதைகளும், வரலாற்று ஆய்வாளர்களும் மாணவர்களோடு சேர்ந்து நாட்டிலுள்ள சமூக, அரசியல், பொருளாதார பிரச்சனைகளை ஆய்வு செய்யும் களமாக இருந்துவரும் அம்பேத்கர் -பெரியார் வாசிப்பு வட்டத்தையும் அதனுடைய முகநூல் செயல்பாட்டையும் தடை செய்வதென்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
                மாணவர்களின் கருத்து சுதந்திரம் என்பது அறிவை விசாலமாக்கி அகண்டமாய் சுடர்விடும் பாரதியின் அக்னி குஞ்சு... அது அவலநிலையில் இருக்கும் சமூகத்திற்கு நல்வழிகாட்டும் கலங்கரைவிளக்கம்... அதன் செயல்பாடுகளை தடை செய்வதென்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது. மத்திய அரசும், நிர்வாகமும் தன்னுடைய போக்கை கைவிடவேண்டும். இல்லையேல்... அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே... உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை... அச்சமில்லை அச்சமென்பதில்லையே... என்ற பாரதி கற்றுத்தந்த பாடத்தை மறவாதவர்கள் எங்கள் வீட்டுப்பிள்ளைகள் என்பதை இவர்களுக்கு  நினைவூட்ட விரும்புகிறோம்.              

6 கருத்துகள்:

raghupathiv சொன்னது…

மனுதர்மம், பார்ப்பனீயம், சூழ்ச்சி, இதெல்லாம் உள்ளடக்கிய கருத்துக்களுடன், எழுதினால் மட்டும் தான் முற்போக்கு, மோடி அரசின் இந்த நடவடிக்கையை ஆதரிக்காதவர்களை க்கூட, எதிர்ப்பவர்களை க்கூட, விலகி இருக்க வைக்கும் வகையில் தங்கள் பதிவுகள் தொடரட்டும்.

raghupathiv சொன்னது…

ஓ, உங்களுக்கு ஏற்புடையதல்ல என்றால், மாற்று கருத்து தெரிவித்தால், அது காண்பிக்க படாது, அப்படித்தானே,

tamilan சொன்னது…

பார்ப்பணன் அல்லாத இந்துக்கள் சூத்திரன்.

சூத்திரன் என்றால் யார்?

சாமி கும்புட போற ”சூத்திரர்களை” பார்ப்பனர்கள் எப்படி நடத்துறாங்க. அவர்கள் பேர்ல அர்ச்சனை பண்ணும்போது ”ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா”ன்னு சொல்கிறார்களே.

அதுக்கு என்ன அர்த்தம்.”ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம்”.

இந்து மதத்திற்கும், வருணாசிரமத்திற்கும் ஆதாரமான மனுதர்ம சாஸ்திரம், எட்டாம் அத்தியாயம் 415, 417 -வது சுலோகங்களில்

சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்றும், வைப்பாட்டி மகன் என்றும் எழுதியிருப்பதோடு

இவர்கள் வசமுள்ள பொருள்களை பலாத்காரமாகவும் பார்ப்பனர் எடுத்துக் கொள்ளலாம் என்றும், நமது பின் சந்ததிகளையும் கட்டுப்படுத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள்.

நீங்கள் ஒரு "இந்து" என்றால் இதுதான் இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்
--------------------

நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்!
அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா,

கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா?

கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்!

கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ! - நூல்: "சிந்தனையும் பகுத்தறிவும்" பக்கம் 8-11

*************

மனுவின் அத்தியாயம் 1 இல் முப்பத்தியோராம் சுலோகம் சொல்கிறது,

"ப்ரஹ்மாவாகப்பட்டவர், உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், தொடை, கால் இவைகளில் இருந்து, பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்".

மனுவின் பதினோராம் அத்தியாயம், எண்பத்து நான்காம் ஸ்லோகம் சொல்கிறது,

“பிராமணன் மட்டுமே பிறவிச்சிறப்பாளன், தேவரும் மதிக்கத்தக்கவன், மனிதரின் பிறப்பால் உயர்ந்தவன், தேவமந்திரமே அவன் உயர்வுக்கு மூல காரணம், எனவே அவனது முடிவுப்படி நடக்க வேண்டும்".

மனுவின், ஏழாம் அத்தியாயம், முப்பதியேழாம் ஸ்லோகம் சொல்கிறது,

“அரசர்கள் பிராமணர் அறிவுரைகளைக் கேட்பது நன்று, அதுவே ஆக்கம் தரும், அவர்களின் முடிவிற்குப் புறம்பாய் நீதி வழங்கிய அரசர்கள் அழிந்தனர்”

மனு அத்: - 9, ஸ்லோகம் - 317 சொல்கிறது:

“வைதீகமாயிருந்தாலும், லோவ்கீகமாயிருந்தாலும், அக்னி எப்படி மேலான தெய்வமாய் இருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியை இருந்தாலும், மூடனாய் இருந்தாலும், அவனே மேலான தெய்வம், அனைவரும் அவனை வணங்க வேண்டும்”

மனு : அத் : 2 ஸ்லோகம் : 135 சொல்கிறது:

“பத்து வயதுள்ள பிராமணனையும், நூறு வயதுள்ள க்ஷத்ரியனையும், தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டியது, பிராமணன் தகப்பன் மரியாதையையும், க்ஷத்ரியன் புத்திர மரியாதையையும் வகிக்க வேண்டியது".

அத்: 10 ஸ்லோகம் 73 சொல்கிறது:

"பிராமணனுக்குரிய தொழிலைச் செய்தாலும், சூத்திரன் ஒருக்காலமும் பிராமண ஜாதியாக மாட்டான், சூத்திரன் செய்கிற தொழிலைச் செய்ய நேரிட்டாலும் பிராமணன் சூத்திரனாக மாட்டான், ஏனென்றால் ஈனத் தொழிலைச் செய்தாலும், அவன் ஜாதி உயர்ந்தது அல்லவா? இப்படியே இந்த விஷயங்களை ப்ரஹ்மா நிச்சயம் செய்திருக்கிறார்”

அத்: 10 ஸ்லோகம் : 125 சொல்கிறது:

"பின்னும் மீதமான அன்னம், பழைய வஸ்திரம், நொய் அரிசி முதலிய சாரமில்லாத தானியம், பழைய பாத்திரம், எச்சில் உணவு இவற்றை சூத்திரனுக்குக் கொடுத்துப் புசிக்கச் செய்ய வேண்டும்”.

மனு தனது அத்தியாயம் 12, ஸ்லோகம் 4 இல் இவ்வாறு சொல்கிறார்:

"வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்".

.

tamilan சொன்னது…

கம்பரின் கடவுள்பக்தி சொட்டுவதா கம்பராமாயணம் பாரீர், என்று காட்டுமுகத்தான், பிழிந்து தரப்பட்டதுதான் “கம்பரசம்!” இந்துக்களின் தெய்வ காவியமாகப் போற்றப்படக் கூடிய நூல் கம்ப இராமாயணம். ஆனால் இது அத்தகையப் போற்றுதலுக்கெல்லாம் தகுதியான நூலா எனப் பார்த்தால் நிச்சயம் இல்லை என்றே தோன்றுகிறது.

இது பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் படிக்கக் கூடாத ஒரு ஆபாச நூலாகத் தோன்றுமளவு இருக்கிறது கம்பனின் வர்னனைகள்.

ஒரு கடவுள் காவியத்தில் இத்தனை ஆபாசங்களா? என்பதை அறிஞர் அண்ணா எழுதிய "கம்பரசம்" எனும் நூலைப் படித்ததும் எழுந்த கேள்வி இது.

இந்த நூலில் அவர் சுயமாக எந்தக் கற்பனைக் குதிரையயும் அவிழ்த்து விட்டு மிகைப்படுத்திக் கூறவில்லை. மாறாக தெய்வ காவியமான "இராமாயணத்தில்" கம்பனால் சொட்டப் பட்ட காமரசம் மிகும் பாடல்களைத் தொகுத்து அதற்கான விளக்கங்களை தெளிவு பட எழுதியிருக்கிறார்.

கம்பரசம். கம்பராமாயணம் கடவுள் காவியமா? அல்லது காம காவியமா? பாகம் 1.


கம்பரசம். கம்பராமாயணம் கடவுள் காவியமா? அல்லது காம காவியமா? பாகம் 2.

கம்பரசம். கம்பராமாயணம் கடவுள் காவியமா? அல்லது காம காவியமா? பாகம் 3.

.

raghupathiv சொன்னது…

அநேகமாக எல்லா பண்டைய இலக்கிய படைப்புகளும் நவரசம் உள்ளடக்கி படைக்கப்பட்டவையே. அவற்றை இலக்கியமாக, ரசித்து படித்து, அனுபவமாக, இருக்கும் வரை, நீங்கள் கருத்துரைத்தவாரு தோன்றாது, ரசிகமணி அனுபவம் அதுவே. பக்தி இலக்கியமாக பார்ப்பவர்கள், அந்த உணர்வுகளால் பாதிப்பு அடைய மாட்டார்கள். ஆண்டாள் பாசுரங்கள் ஜெயதேவ் அஷ்டபதி, என பல சிருங்காரமும், பக்தியும் இணைந்தவை. பாரதீ, கம்பனை பார்த்தது அப்படியே.

raghupathiv சொன்னது…

மனுதர்மம், அதன் கூறுகள், இன்று 99% பார்ப்பனர்கள் அறவேஅறியாதது, பின் பற்றாதது,இன்றைய வாழ்க்கைக்கும் தேவையில்லை. இதை புதைகுழியில் இருந்து வெளியே எடுத்து, அலசி, ஆராய்ந்து, பொழிப்புரை எழுதுவது, நம் தோழர்களே. எனக்கு என்னவோ, செத்த பிணத்திற்கு உயிரூட்டி குளிர் காய , சங பரிவார் ஒரு புறம், மறுபக்கத்தில், பொதுயுடைமை வாதிகள் என்று தோன்றுகிறது